12 ராசியினரில் படு ஜாலியாக இருக்கக்போகும் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..! 

உங்களுடைய பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆடை ஆபரணங்கள் உங்களுக்கு வந்து சேரும்.

ரிஷப ராசி நேயர்களே..!

எதையோ இழந்ததைப் போல இன்று கவலையாக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சில் நிதானம் தேவை.

மிதுன ராசி நேயர்களே..! 

எந்த காரியத்திலும் அவசரப்பட்டு இறங்க வேண்டாம். பொறுமையாக இருங்கள். சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டாம்.

கடக ராசி நேயர்களே..! 

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் உங்கள் கைக்கு வந்து அடையும்.

சிம்ம ராசி நேயர்களே...!

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்க முற்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பாசமழை பொழிவார்கள். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் இன்று முடிவுக்கு வரும். சொந்தபந்தங்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

புதிய முதலீடுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். வெளி உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

குடுமபத்தில் ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறும். மனைவி வழியில் ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கு பல புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். உங்களை நாடி வந்தவர்களுக்கு எப்படியும் உதவி செய்வீர்கள். நவீன சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

புதிய சிந்தனைகள் உங்களுக்கு அதிகரிக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நவீன சாதனங்களை வாங்க கூடிய சூழல் உருவாகும்.

கும்ப ராசி நேயர்களே..!

நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சில நல்ல செய்தி உங்களை வந்தடையும். உங்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் தேடி வரும்.

மீனராசி நேயர்களே...!

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காண்பிப்பீர்கள். அரசால் உங்களுக்கு அனுபவம் உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் உங்களைப் பாராட்டுவார்கள் திடீரென சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.