12 ராசியினரில் பக்காவா திட்டமிடும் ஜாம்பவான்கள் யார் தெரியுமா...? 

மேஷ ராசி நேயர்களே..! 

கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த கசப்புணர்வுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த இடத்திலிருந்து பண வரவு இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

எதற்கெடுத்தாலும் மற்றவர்களை சந்தேகப்படும் குணத்தை தவிர்த்துவிடுங்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மிதுன ராசி நேயர்களே..!

பிள்ளைகளால் உங்களுக்கு அவ்வப்போது டென்ஷன் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அக்கம்பக்கத்தினர் சிலர் உங்களை எரிச்சல் ஏற்படுத்தினாலும் நீங்கள் அமைதி காப்பது நல்லது. வாகன பராமரிப்பு மேற்கொள்ளுங்கள்.

கடகராசி நேயர்களே..!

அதிரடியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம். பழைய கடனை பைசல் செய்வது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும் கூடிய நாள் இது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் உங்கள் கைக்கு இன்று கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

புதிய பாதையில் பயணிக்க திட்டமிடுவீர்கள். பிள்ளைகளுக்கு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழக்கூடிய நாள்.

கன்னி ராசி நேயர்களே...!

விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வு காண முற்படுவீர்கள். தயக்கம் இன்றி எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுவது நல்லது.

துலாம் ராசி நேயர்களே...!

செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது மிகவும் நல்லது. நண்பர்கள் சிலர் உதவுவதை போல் உபத்திரவம் செய்வார்கள். உஷாராக இருங்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்பட கூடிய நபர் நீங்கள். சகோதரர் வகையில் உங்களுக்கு ஆதாயமுண்டு. கல்யாண பேச்சுவார்த்தை எடுபடும். பயணங்களால் நல்ல விஷயம் நடக்கும்.

தனுசு ராசி நேயர்களே..!

உங்களை விட்டு விலகி இருந்த உறவினர்கள் நண்பர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். அரசு காரியங்களில் சில ஆதாயமுண்டு.

மகர ராசி நேயர்களே...!

உங்களின் நீண்ட நாள் கனவு இன்று நனவாக கூடும்.  பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைக்கவேண்டும். சேமிக்க திட்டமிடுவீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

அரசு அதிகாரிகளின் உதவியால் சில முக்கிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது கருத்துவேறுபாடு வந்துபோகும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

மீனராசி நேயர்களே...!

சவால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வீடு வாங்குவது குறித்து அது குறித்துப் பேசுகிறீர்கள். லாபகரமான சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள். பல பிரபலங்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள்.