12 ராசியினரால் "புதிய தொழில் ஒப்பந்தம்" வாய்ப்பு யாருக்கு உண்டு தெரியுமா ..? 

மேஷ ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் மெல்ல மெல்ல உயரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

இன்று வளர்ச்சி அதிகரிக்கும் நாள். கடந்த சில நாட்களாக தாமதமாக இருந்து வந்த வேலை விரைவில் முடிந்து விடும். உத்தியோகத்தில் உயர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வருமானம் எதிர்பார்த்தபடி அமையும்.

மிதுன ராசி நேயர்களே..!

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நாள். வரும் வாய்ப்புகளை சரியாக உபயோகம் செய்து கொள்வது மிகவும் நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

கடகராசி நேயர்களே...!

பயணங்களால் அதிக பலன் கிடைக்கும். பணத்தேவைகளை கடைசி நேரத்தில் யாராவது வந்து உதவி செய்வார்கள். ஆரோக்கியம் சீராக வைத்துக்கொள்வது நல்லது. அலங்கார பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். இது வெளிவட்டாரத்தில் உங்களது பழக்கவழக்கம் அதிகரிக்கும். வீடு இடமாற்றம் செய்யலாம் என்ற யோசனை அதிகரிக்கும். பயணங்களால் திடீர் மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே..!

கடமையில் கண்ணும் கருத்துமாக பேசுவீர்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்கள் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் போதுமான அளவுக்கு வரும்.

துலாம் ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பூமி யோகம் உங்களுக்கு எப்போதும் உண்டு. தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகள் வெற்றி அடைவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தொழில் ரீதியாக உயர்வீர்கள். தொலைபேசி வழியில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். 

தனுசு ராசி நேயர்களே...!

மனக்குழப்பம் சற்று அகலும். நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். அவரவருக்கு ஏற்ற செலவு இருக்கும்.  திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே..!

எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் உங்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். எந்த ஒரு முடிவையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது நல்லது.

கும்ப ராசி நேயர்களே...!

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். கைமாத்தாக  கொடுத்த பணம் திரும்பி வர வாய்ப்பு உள்ளது. உத்தியோக மாற்றம் ஏற்படலாம். அக்கம் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை சற்று குறையும்.

மீனராசி நேயர்களே...!

பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்காக பல்வேறு விஷயங்களை செய்வீர்கள். பூர்விக சொத்தை விற்று புதிய சொத்து வாங்க கூடிய எண்ணம் மேலோங்கும்.