12 ராசியினரில் யாருக்கெல்லாம் நல்ல செய்தி வரப்போகுது தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

பழைய சம்பவம் ஒன்றை நினைத்து நண்பரிடம் விவாதிக்க நேரிடலாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். நண்பர்கள் உதவ முன்வருவார்கள்.

ரிஷப ராசி நேயர்களே....! 

நண்பர்களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும். குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவு பெருகும். வேற்று மொழி பேசும் நபர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்

மிதுன ராசி நேயர்களே...!

வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். புதிய சொத்து பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே...!

விலகியிருந்த சொந்தபந்தங்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அலைச்சல் உண்டாகும்.

சிம்மராசி நேயர்களே...!

உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழப்பமான விஷயங்களில் தெளிவு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீடு வாங்குவது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும்.

துலாம் ராசி நேயர்களே...!

பண வரவு திருப்தியாக இருக்கும். மிகவும் உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு உங்களுக்கு எளிதாக கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே....!

முன்கோபம் அதிகரிக்க நேரிடலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.

தனுசு ராசி நேயர்களே...!

எதிர்காலம் பற்றிய கவலை அவ்வப்போது வந்து நீங்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். வாழ்வில் அடுத்த கட்ட முயற்சிக்கு செல்ல திட்டமிடுவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

உங்கள் புகழ் உயரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பங்கு வர்த்தகம் உங்களுக்கு லாபகரமாக அமையும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

பல புதிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்தி வந்து அடையும்.

மீனராசி நேயர்களே..!

உங்களது நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சில முக்கிய முடிவுகளை தள்ளிப்போடாமல் உடனடியாக எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள்.