12 ராசியினரில் புதிய பிஸினஸ் தொடங்க யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

புதிய பொறுப்புகள் வந்து சேரும். புகழ்மிக்கவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். இதுவரை இழுபறியாக இருந்து வந்த பல செயல்கள் விரைவில் செய்து காட்டுவீர்கள். 

ரிஷப ராசி நேயர்களே...!

அமைதி கிடைக்க அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக பணிகள் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வெளியில் பயணம் செய்யும் போது கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.

மிதுன ராசி நேயர்களே...!

சந்தோஷம் அதிகரிக்கும். வருமானத்தை உயர்த்த பல புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். திருமண பேச்சை தொடங்க வாய்ப்பு உண்டு.

கடக ராசி நேயர்களே...!

பணவரவு அதிகரிக்கும். பக்கத்தில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு அதிகமாக கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் போட வேண்டிய நிலை உருவாகும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மெல்ல மெல்ல குறையும் 

சிம்ம ராசி நேயர்களே..!

நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீரென வெளியூர் பயணங்கள்  மேற்கொள்ள வேண்டி வரலாம். 

கன்னி ராசி நேயர்களே...!

பொருளாதார நிலையை உயர்த்த, புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவில் கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி நேயர்களே...!

விஐபிக்களின் உதவி கிடைக்கும் நாள்.வீடு வாங்கும் முயற்சி உங்களுக்கு வெற்றி கொடுக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய பல புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சக ராசி நேயர்களே...!

செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும். பல மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். வாழ்க்கைக்கு தேவையான பல திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

தடைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கக்கூடிய நாள். தனித்து செயல்பட முயற்சி மேற்கொள்வீர்கள். 
ஆர்வம் அதிகரிக்கும். சுபச்செலவுகள் தேடிவரும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

நம்பிக்கை அதிகரிக்கும். வரவு அதிகமாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். சண்டை சச்சரவுகள் வரும். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மீனராசி நேயர்களே...!

புதிய பல திட்டங்களை தீட்டுவீர்கள். திறமை வெளிப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முற்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.