12 ராசியினரில் இப்ப வீடு வாங்கும் யோகம் யாருக்கு தெரியுமா..?
 
மேஷ ராசி நேயர்களே...!

நேற்று இருந்த பல பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். வீடு இடம் வாங்க அடுத்தடுத்து முயற்சி மேற்கொள்வீர்கள். 

ரிஷப ராசி நேயர்களே...!

பணம் வருவதற்கு முன்னரே செலவு அதிகமாக இருக்கும். நண்பர்களை நம்பி ஏமாற வேண்டாம். எதுவாக இருந்தாலும் யோசனை செய்வது நல்லது. 

மிதுன ராசி நேயர்களே...!

கல்யாண கனவு விரைவில் நனவாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நம்பிக்கை ஏற்படும். வீட்டு  உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மனை வாங்க கூடிய யோகம் கிடைக்கும். 

கடக ராசி நேயர்களே...!

வெளியில் கொடுத்திருந்த பணம் உங்கள் கைக்கு மீண்டும் கிடைக்கப்பெறும். பல நாட்களாக செய்ய நினைத்த வேலை ஒன்றை நீங்கள் விரைவில் செய்து காட்டுகிறார்கள்.

சிம்மராசி நேயர்களே...!

பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். பிரபலமானவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி நேயர்களே...!

கடன் சுமை அதிகரிக்கும் நாள். காலை நேரத்தில் மகிழ்ச்சியான தகவல் உங்களுக்கு வந்து சேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழக்கூடிய நாள். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும் நாள் இது. நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளிலிருந்து தேக்க நிலை மாறி நல்ல முறையில் நடக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

வெற்றியை எட்டிப் பிடிக்கும் நாள். நண்பர்கள் மூலம் சில நல்ல செய்திகள் வந்தடையும்.  குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து காட்டுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த காரியம் ஒன்று நடைபெற்று இன்பம் அதிகரிக்கும் நாள். சவால்களை சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

மகர ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பதவியில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வது சிறந்தது.

கும்ப ராசி நேயர்களே...!

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். தொழிலில் புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனராசி நேயர்களே...!

மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தொடங்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட நேரிடலாம். வாயை அடக்கி வாசிப்பது நல்லது