12 ராசியினரில் வாயை அடக்கி வாசிக்க வேண்டியவர்கள் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

அலைச்சல் அதிகரிக்கும் நாள். தொடர்ந்து செலவுகளும் ஏற்படும். உங்களை சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். உடல்நலத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்கள் இலக்கை நோக்கி பயணம் செய்வீர்கள். உங்களுடைய இளமை நாளுக்குநாள் கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். விருந்தினர் வருகை ஏற்பட வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி நேயர்களே...!

வேற்று மொழி பேசும் ஒரு நபரால் உங்களுக்கு பல உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விஷயம் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழக்கூடிய நாள்.

கடக ராசி நேயர்களே...!

பொது அறிவை வளர்த்துக் கொள்ள முற்படுவார்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு காண முற்படுவீர்கள். யோகா தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

சிம்மராசி நேயர்களே...!

சுறுசுறுப்புடன் செயல்பட்டு அனைத்து வேலைகளையும்,புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப்பற்றாக்குறையை எளிதாக சமாளித்து காட்டுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே....!

விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். தடைப்பட்ட பல வேலைகள் மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். உங்களுக்கு பிடித்த மின்சாதன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

பொதுக் காரியங்களை முன்னின்று நடத்த கூடிய நபராக மாறுவீர்கள். பழைய கடன் பிரச்னையை நினைத்து உங்களது நிம்மதி பாதிக்கப்படும். சில சமயங்களில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

தொடர்ந்து மேற்கொள்ளும் பயணங்களால் ஓய்வெடுக்க முடியாமல் உடல்நலம் பாதிக்க வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மகர ராசி நேயர்களே...!

பல பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கப்பெறும். முக்கிய ஒரு பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 

கும்ப ராசி நேயர்களே...! 

உறவினர்கள் மத்தியில் உங்களுடைய அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும். உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே...!

நினைத்த காரியம் தங்குதடையின்றி நிறைவேறும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதற்கெடுத்தாலும் கோபப்படாமல் வாயை அடக்கி பேசுவது நல்லது.