12 ராசியினரில் ஒரே ஜாலியாக இருக்கப்போவது யார் தெரியுமா..?

மேஷ ராசி நேயர்களே..!

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

சிக்கனமாக செலவு செய்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அரசாங்க வேலையில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விடாப்பிடியாக ஒரு செயலை செய்து முடித்துக் காட்டுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. எடுத்த காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். சகோதரர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

கடகராசி நேயர்களே..!

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சில வேலைகளை முடிக்க முடியாமல் தவிப்பீர்கள்.  

சிம்ம ராசி நேயர்களே..!

சில வேலைகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள். விமர்சனங்களைக் கண்டு அஞ்சி பின்வாங்க வேண்டும். 

கன்னி ராசி நேயர்களே..! 

அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து போகும். உறவினர்கள் நண்பர்கள் சிலர் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது மருத்துவ செலவு ஏற்படலாம்.

துலாம் ராசி நேயர்களே..! 

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேச வேண்டிய சூழல் உருவாகும். உடல் நிலை சீராக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே..! 

ஒருவிதமான பயம் நீங்கும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். விருந்தினர் வருகையால் சந்தோஷமாக இருக்கும்

தனுசு ராசி நேயர்களே..! 

எல்லா வேலைகளையும் மிக எளிதாக செய்து முடிக்க முற்படுவீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். முக்கிய கோப்புகளை கையெழுத்திடும் போது கவனிப்பது நல்லது. 

மகர ராசி நேயர்களே..!

எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்ய வேண்டிய நிலை உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் போது கவனமாக இருப்பது நல்லது.

கும்ப ராசி நேயர்களே..! 

அதிரடியாக  திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும் 

மீன ராசி  நேயர்களே...! 

முகப் பொலிவுடன் காணப்படுவீர்கள். துரிதமாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டிய நிலைமை உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.