12 ராசியினரில் ஆலய வழிபாடு செய்ய வேண்டியர்கள் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். நல்லவர்களின் ஆசீர்வாதத்தால் இன்று உங்களுக்கு ஆதாயம் தரும் நாளாக அமையும்.

ரிஷப ராசி நேயர்களே...!

தொழில் போட்டிகள் சற்று குறையும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முற்படுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது நல்லது. நீங்கள் நினைத்த காரியம் ஒன்று விரைவில் நடக்கும்.

கடக ராசி நேயர்களே..!

விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். உங்களுடைய உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்க முன்வருவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் திருப்திகரமாக இருப்பீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

வெளியுலக தொடர்பு உங்களுக்கு அதிகரிக்கும். இன்று ஓர் நல்ல செய்தி வந்து சேரும். நீங்கள் செய்யும் வேலையில் ஒரு  திருப்பத்தை எதிர்பார்க்கலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய திட்டம் ஒன்றை பற்றி சிந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிடலாம். முக்கிய புள்ளிகள் உங்களை நேரில் வந்து சந்திக்க வாய்ப்பு உண்டு.

துலாம் ராசி நேயர்களே...!

நாளுக்கு நாள் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பண வரவு வந்தாலும் உடனுக்குடன் செலவு அதிகரிக்கும். அன்றாட பணிகள் நன்றாக அமைய ஆலய வழிபாடு தேவை. மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் கொடுக்க வேண்டாம். 

விருச்சிக ராசி நேயர்களே..!

பரபரப்பாக செயல்பட்டு, பாராட்டு மழையில் நனையும் நாள் இது. மதியத்திற்கு மேல் நல்ல ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடக்கும். தொலைபேசி வழியாக நல்ல தகவல் வரும். உடல் நலனில் அக்கறை கண்டிப்பாக தேவை.

தனுசு ராசி நேயர்களே...!

நட்பு வட்டம் விரிவடையும் நாள்.  கொடுத்த தொகையை வசூல் செய்வீர்கள். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களது உறவினர்கள் வீட்டிற்கு இன்று வரலாம்.  கடிதம் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

தேவைகள் பூர்த்தி ஆகும். உறவினர்கள் உங்களுடன் நெருங்கிப் பழக தொடங்குவார்கள். தொழில் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு இனிமையான நாள். வீடு இடம் வாங்க யோசனை செய்வீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க செலவுகள் அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே...!

ஆதாயம் தரும் நல்ல தகவல் இன்று காலையிலேயே வரும். தொழில் வளர்ச்சிக்கு ஆதரவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.