12 ராசியினரில் "பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம்" வாங்கும் வாய்ப்பு யாருக்கு உண்டு தெரியுமா..?  

மேஷ ராசி நேயர்களே...!

இன்று தாராளமாக பணத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களது பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர்வுகள் வர வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி நேயர்களே...!

தைரியத்தோடு செயல்பட வேண்டிய நாள். வழிபாட்டு தலங்களுக்கு செல்ல ஆசைப் படுவீர்கள். சகோதரர் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

வாழ்வில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். திருமண முயற்சி குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்வாக அமையும். திடீரென வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கு ஏற்றவாறு உங்களுக்கு நன்மை கிடைக்கும். உடல்நலனில் அதிக அக்கறை காட்டுவது நல்லது.

கடக ராசி நேயர்களே..!

உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சரியான நாள் இது. வெளிவட்டாரப் பழக்கம் அதிகரிக்கும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வீர்கள். தொழில் மாற்றச் சிந்தனை அடிக்கடி மேலோங்கி நிற்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

பணம் செலவழித்தாலும் அதற்கேற்றவாறு ஒரு பக்கம் வருமானம் இருக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வார்கள். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக அமையும். எதிர்பார்த்ததை விட உங்களுக்கு லாபம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி நேயர்களே...!

தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை கண்டு மேலதிகாரிகள் வந்து பார்க்கக்கூடிய அளவுக்கு நீங்கள் உயர்வீர்கள். பணத்தை கையாளும் போது கவனம் தேவை.

துலாம் ராசி நேயர்களே...!

பணத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். விலகிப்போனவர்கள் மீண்டும் வந்து பேச வாய்ப்பு உண்டு. சந்தோஷம் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

கனவுகள் நனவாகும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடையும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. தொழிலில் அதிக முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே..!

சவால்களை சந்தித்து வாழ்க்கையில் மென்மேலும் உயர்வீர்கள். பிறர் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டால் உங்களை தேடி வரும் பிரச்சனை நீங்கிவிடும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

மகர ராசி நேயர்களே...!

வருமானத்திற்கு வழி வகை பிறக்கும். தொழிலில் இதுநாள்வரை மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் நீங்கும். பொது வாழ்க்கையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

கும்ப ராசி நேயர்களே...!

நன்மைகள் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். இடம் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

மீனராசி நேயர்களே...!

வரவு அதிகரிக்க கூடிய நாள். புதிய முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் வரும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.