12 ராசியினரில் தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லக்கூடாத ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

திறமைகள் வெளிப்படும் நாள். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதி கொடுக்கும். ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி நேயர்களே..!

பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். புதிய முயற்சி வெற்றி கொடுக்கும்.

மிதுன ராசி நேயர்களே..! 

பெற்றோர்கள் வழியில் அன்பு கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவலை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். பழைய வாகனத்தை பராமரிக்கும் எண்ணம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். 

கன்னி ராசி நேயர்களே..!

பணப்பற்றாக்குறை அகலும். வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்

சிம்ம ராசி நேயர்களே...!

அடுத்தவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்க்கும். எண்ணம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொலைதூர பயணம் மேற்கொண்டு அதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

கொடுக்கல் வாங்கல் சரியாக இருக்கும். எது நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாகவே நடந்து முடியும். உடல் நலனில் அக்கறை தேவைப்படுகின்றது. தொழில் ரகசியங்களை யாரிடமும் கூறாதீர்கள்.

துலாம் ராசி நேயர்களே..!

பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோக நலன் கருதி ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் அதிகரிக்கும். பலன் கொடுக்கும்

விருச்சக ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு யோகமான நாள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை தரும். அதிக லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி சில முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

மனதிற்கு பிடித்த ஒரு சம்பவம் நடைபெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் அதிக நாட்டம் கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே..!

உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் உறவினர்களின் பகைக்கு ஆளாவாதீர்கள். உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் பேசாதீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம் 

கும்ப ராசி நேயர்களே...!

எதிரிகளின் பலம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாக பேசாதீர்கள். உத்தியோக மாற்றம் குறித்து சந்திப்பீர்கள்.

மீன ராசி நேயர்களே...!

பிரிந்து சென்றவர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். வாழ்க்கை துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் ஓர் எண்ணம் நிறைவேறும்.