12 ராசியினரில் யாருக்கு இன்று அதிக பணம் கிடைக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

நல்ல வீடு வாங்க முடிவெடுப்பீர்கள். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு இன்று நல்ல செய்தி தேடி வரும்.

ரிஷப ராசி நேயர்களே...!

இன்று தொட்டதெல்லாம் நிறைவேறும் நாள். சகோதரர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வீடு புதிய சொத்து வாங்க முன் பணம் தர நேரிடலாம். வெளிநாடு செல்ல முயற்சி செய்து வந்திருந்தால் உங்களுக்கு மிக எளிதாக கிடைக்க வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி நேயர்களே...!

பங்குசந்தையின் மூலமாக இன்று லாபம் கிடைக்கும். பணம் வருமா என்று எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில் தேவையான பணம் உங்கள் கைக்கு வந்தடையும். பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகராசி நேயர்களே...!

யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். யாருக்கும் உங்களது உறுதிமொழியும் தர வேண்டாம். விமர்சனங்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி நேயர்களே...!

எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் அதிகரித்துக்கொண்டே காணப்படும். நீங்க பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.

கன்னி ராசி நேயர்களே..!

பெரிய திட்டங்கள் தீட்டி செயல்படுத்த முற்படுவீர்கள். எதிர்பாராத வகையில் உங்கள் கைக்கு 
தொகை வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு உங்களது வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

நீங்கள் விரும்பிய பதவிகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு விஷயம் உங்களுக்கு கிடைக்கும். பணவரவு பொருள் இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு உங்களுடைய திறமையான அணுகுமுறையால் சுமுகமாக தீர்வு காண்பீர்கள். பல முக்கிய விஐபிக்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். எதை செய்தாலும் மிக கவனமாக செய்வது நல்லது.

தனுசு ராசி நேயர்களே..! 

வாகன பயணத்தின் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது கூடாது. உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் உங்களிடம் வந்து பேச வாய்ப்பு உண்டாகும்.

மகர ராசி நேயர்களே..!

எத்தனையோ சோதனைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறுவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். 

கும்ப ராசி  நேயர்களே..!

பெரிய பெரிய விஐபிக்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். பல பிரச்சனைகள் உடல் நலக் குறைவு இருந்தாலும் தைரியமாக சமாளித்து காட்டுவீர்கள். குடும்பத்தினருடன் ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள்.

மீன ராசி நேயர்களே..! 

பிள்ளைகளால் உங்களுடைய மரியாதை உயரும். வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனத்தை வாங்க முற்படுவீர்கள். வீடு வாகனம் வாங்க மிக எளிதில் லோன் கிடைக்கும். அனைவரிடமும் அரவணைத்துச் செல்வது நல்லது.