மேஷம் முதல் மீனம் வரை 12 ராசியினரும் என்ன பாடுபட போறீங்களோ ..!

மேஷ ராசி நேயர்களே..!

முன்னேற்ற பாதையை நோக்கி அடி எடுத்து செல்லக்கூடிய நபர். நின்று போன சில பணிகளை விரைவாக செய்து முடிக்க முற்படுவீர்கள். உங்களுக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் இது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடனிருப்பவர்கள் சற்று அனுசரித்து செல்லுங்கள். அடுத்த கட்ட முயற்சியில் இறங்கி அதில் வெற்றி காண திட்டமிடுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

திடீரென பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வரலாம். அனைவரிடத்திலும் பக்குவமாக பேசி சாதிப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

பொறுமையைக் கடைப்பிடித்து வாழ்வது நல்லது. வரவை விட செலவு அதிகரிக்க கூடும் என்பதால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாவீர்கள். இருந்தபோதிலும் மனதை தளர விடாமல் இருப்பது நல்லது.

சிம்மராசி நேயர்களே...!

உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எவ்வளவுதான் பணம் வந்தாலும் அது போதுமானதாக இல்லை என்று புலம்ப தொடங்குவீர்கள். உடல் நலனில் அதிக கவனம் தேவை.

கன்னி ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைத்து விடுவதால் மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள். நண்பர்களிடம் கலகலப்பாக பேசி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவது குறித்து முயற்சி மேற்கொள்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

விருச்சக ராசி நேயர்களே...!

சந்தோஷம் அதிகரித்துக் காணப்படும். முக்கிய புள்ளிகள் உங்களைத் தேடிவந்து பேசுவார்கள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முற்படுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

நீண்ட  நாள் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மகர ராசி நேயர்களே...!

தொழிலை விரிவுபடுத்த உங்களுக்கு தேவையான பணம் வந்து சேரும். தொலைபேசி வாயிலாக நல்ல செய்தி உங்களை வந்தடையும்.

கும்ப ராசி நேயர்களே...!

புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வந்து பேச முற்படுவார்கள்.

மீனராசி நேயர்களே..!

சவால்களை எளிதாக சமாளிக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வரும்.