12 ராசியினரில் பட்டைய கிளப்பும் சூப்பர் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

உங்களுக்கு இன்று யோகமான நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகளும் அதிகரித்து காணப்படும். உடல் நலத்தில் அக்கறை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு பிடித்த சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நேற்று நடந்த ஒரு பிரச்சினை இன்று சுமூகமாக முடிவடையும். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசலுக்கு  தீர்வு கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!
.
இன்று உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும். வாழ்க்கை துணை வழியே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகள் மாறும். உங்களுடைய பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

தைரியத்தோடு செயல்பட்டு ஒரு சாதனை படைப்பீர்கள். பண வரவு அமோகமாக இருக்கும். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

அலைபேசியில் ஒரு நல்ல செய்தி வந்தடையும். இதுநாள் வரை தொல்லை கொடுத்து வந்தவர்கள் உங்களுக்கு தோள் கொடுத்து உதவி செய்ய முன் வருவார்கள். திருமண முயற்சி குறித்து பேசத் தொடங்குவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

சொன்ன சொல்லைக் காப்பாற்றும்  நபர் நீங்கள். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். செல்வநிலை உங்களுக்கு உயரும்.

துலாம் ராசி நேயர்களே...!

சொத்து தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க பிரபலமானவர்கள் உங்களுக்கு யோசனை கூறுவார்கள். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே..!

பண தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நினைத்த காரியத்தை அவ்வப்போது முடித்துக் காட்டுவீர்கள். பக்குவமாக பேசி எந்த ஒரு காரியத்தையும் துல்லியமாக சாதித்து முடிப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

தொழில் வளர்ச்சிக்கு உங்களுடைய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செலவிற்கு ஏற்ற வரவு உண்டு. ஒரு சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். கோவில் பணிகளில் ஆர்வம் உண்டாக வாய்ப்பு உண்டு.

மகர ராசி நேயர்களே...!

செலவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பெரியவர்களின் யோசனையைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கும்ப ராசி நேயர்களே...!

வசதி வாய்ப்பு பெருகும். வளர்ச்சி பாதையை நோக்கி செல்வீர்கள். பெரியவர்களின் யோசனை கேட்டு நடப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் பகை அகலும்.

மீனராசி நேயர்களே..!

எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.