12 ராசியினரில் இன்று செம குஷியாக இருக்குப்போவது யார் தெரியுமா...? 

மேஷ ராசி நேயர்களே...!

கல்யாண பேச்சுவார்த்தை அடிபடும். பிரபலங்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சில குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்தடையும்.

ரிஷப ராசி நேயர்களே..!

நிலையான வருமானத்திற்கு வழி வகை செய்ய முற்படுவீர்கள். உங்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு வரும். தேவையில்லாத பிரச்சனையில் இருந்து விலகி இருப்பதே உங்களுக்கு நல்லது.

மிதுன ராசி நேயர்களே...!

செலவு அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்வது என்று சிந்திப்பீர்கள். மாலை நேரத்தில் ஓர் மகிழ்ச்சியான செய்தி வந்தடையும்.

கடக ராசி நேயர்களே...!

இடமாற்றம் பற்றிய சிந்தனை உங்களுக்கு மேலோங்கும். உங்கள் இல்லம் தேடி வரும் புதிய நபரால் சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகளை உங்களது கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். பணத்திற்காக  முன் பின் தெரியாதவர்கள் கூட உங்களது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

துலாம் ராசி நேயர்களே..!

பாதியில் நின்று போன வேலை விரைவில் முடித்து  காட்டுவீர்கள். ஆதாயம் பெற அலைச்சல் அதிகரிக்கும் நாள் இன்று.

விருச்சிக ராசி நேயர்களே...!

வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

ஒவ்வொரு நாளும் உங்களது புகழ் கூடிக்கொண்டே செல்லும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.  ஒரு சில பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

நாளுக்கு நாள் உங்களது வளர்ச்சி அதிகரிக்கக்கூடும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளி உலக தொடர்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு குறையும். உறவினர்களால் சிறு வருமானத்திற்கும் வழிவகை ஏற்பட வாய்ப்பு உண்டு.

கும்ப ராசி நேயர்களே..!

உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வர வாய்ப்பு உள்ளது. யாரிடமும்  பார்த்து பேசுவது நல்லது. தேவை இல்லாத காரியங்களில் ஈடுபட  வேணடாம் 

மீன ராசி நேயர்களே..! 

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.தேவை இல்லாத  விஷயங்களில் தலையிட வேண்டாம்.