12 ராசியினரில் கணவன் மனைவிக்குள் சண்டை இல்லாமல் இருக்கப்போவது யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். வீடு மனை வாங்குவது குறித்து சிந்திப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

கடந்த கால இனிய சம்பவங்களை நினைத்து சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களது நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சுற்றியிருப்பவர்களின் தன்னலம் பற்றி தெரிந்து கொள்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பாதியில் நின்ற வேலைகள் மும்முரமாக நடைபெறும். புதிய பல நபர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள்

கடக ராசி நேயர்களே...!

சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாக நேரிடலாம். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். பண விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது.

சிம்ம ராசி நேயர்களே..!

பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும் என்பதால் எதனையும் மிக எளிதாக சமாளித்து காட்டுவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே..!

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.  உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். தேவையான பண வரவு இருக்கும்.

விருச்சக ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களை எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். கடனை தீர்க்கும் வழிகளைப் பற்றி சிந்திப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

துணிச்சலாக இறங்கி சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் உங்களுக்கு உதவி கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

மகர ராசி நேயர்களே...!

கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த பணத்தை எளிதாக வசூல் செய்து காட்டுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே..!

யாரைப் பார்த்தாலும் நல்லவர்கள் என நினைத்து பேசிய காலம் சென்று பண்பட்ட மனிதராக  மாறுவீர்கள். உறவினர் நண்பர்களால் செலவுகள் அதிகரிக்க நேரிடலாம். திருமண பேச்சுவார்த்தை நடைபெறும்.

மீனராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி விடும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.