12 ராசியினரில் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

புதிய நண்பர்களை சந்தித்து சந்தோஷமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். திருமண பேச்சு நல்ல முடிவை பெறும்

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களுடைய பொருளாதாரம் உயரும். முக்கிய புள்ளிகள் உங்களைத் தேடிவந்து பேசுவார்கள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும்.

மிதுன ராசி நேயர்களே... !

விரோதிகள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொண்ட பயணம் நன்றாக முடியும். அரசு வழியில் சில சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே...!

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொலைபேசியின் வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும். உங்கள் இல்லத்தில் தேவையான விஷயங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இளைய சகோதர வகையில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மந்த நிலை மாறும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும்.

கன்னி ராசி நேயர்களே..!

வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். வருமானம் எதிர்பார்த்தபடி அமையும்.

துலாம் ராசி நேயர்களே...!

வருமானம் எதிர்பார்த்தபடி அமையும். பயணங்களால் நன்மை உண்டாகும்.  புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள்.

விருச்சிக ராசி நேயர்களே..!

வரவை விட செலவு அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிரித்து பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு ராசி நேயர்களே...!

பயணங்களால் பலன் அதிகரிக்கும். ஆன்மீக வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

மகர ராசி நேயர்களே...!

நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

பணத்தேவைகள் பூர்த்தியாகும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை உங்களுக்கு வெற்றி கொடுக்கும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

மீனராசி நேயர்களே...!

தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். பணம் எதிர்பார்த்தபடி அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்