இப்படி ஒரு பிரச்சனையை சந்திக்க உள்ள ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்க முடிவு செய்வீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

கனவு தொல்லை அடிக்கடி வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடலாம். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

மிதுன ராசி நேயர்களே...!

சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது சர்ச்சைகள் சண்டைகள் வரும்.

கடக ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு சரியாக வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முற்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை கூடும்.

சிம்ம ராசி நேயர்களே...!

எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழிபிறக்கும்.

கன்னி ராசி நேயர்களே..!

மூத்த சகோதரர் வகையில் உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும். கலைப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுவது நல்லது வாகன செலவு வைக்கும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது மிகவும் நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே...!

கல்யாண பேச்சுவார்த்தை ஏற்படும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.  பழைய நண்பர் ஒருவரை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள  வேண்டி வரலாம்

தனுசு ராசி நேயர்களே...!

அக்கம் பக்கத்து வீட்டாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். சகோதரர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பல புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

விவாதங்கள் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனராசி நேயர்களே..!

ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடிய நாள். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அடக்கமாக பேசுவது  நல்லது.ஆரோக்கியத்தில் கவனம் தேவை