12 examination wrote by his legs

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன் பிளஸ்சிங் தன் கால்களால் தேர்வு எழுதி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் .

தற்போது, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது . இந்த தேர்வை தன்னுடைய கால்களால் எழுதிய காட்சி அனைவரையும் நெகிழ செய்துள்ளது .

பிளஸ்சிங் பிறக்கும் போதே ,கைகள் இல்லாமல் தான் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தன்னுடைய அனைத்து வேலைகளையும் தானே, தன்னுடைய கால்களை பயன்படுத்தி செய்து கொள்ளும் அளவிற்கு, பழகி இருக்கிறார்.

பிளஸ்சிங் 1௦ வகுப்பு தேர்வில் 386 மதிப்பெண்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மாணவனின் தன்னம்பிக்கையை பாராட்டி வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .