தமிழகத்தில் 2-வது நாளாக 10 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

6 மற்றும் 7 ஆம் தேதியன்று அதிக வெயிலுடன் அனல் காற்று வீசும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் சென்ற வாரம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்றவாறு அனல் காற்றுடன் வெப்பம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது குமரி கடல் பகுதியில் உருவாகி  உள்ள வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்து இருந்தது.

இருந்தாலும் இன்று மட்டும், மதுரை-106, கரூர் பரமத்தி-104, நெல்லை மற்றும் திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட், சேலம்-102, வேலூர், தருமபுரி மற்றும் திருத்தணியில் 101 டிகிரி வெயில்கொளுத்தியது  என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதே வெயில் அதிகமாக இருப்பதால் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என்பதால் மக்கள் அதற்கேற்றவாறு உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வது நல்லது. எங்கு வெளியில் சென்றாலும் குடை மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் செல்வது நல்லது