105 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதி சாதனை படைத்த பாட்டி...! தொடர்ந்து குவியும் வாழ்த்துக்கள்..! 

105 வயதான பெண்மணி நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள திரிக்கருவா என்ற பகுதியில் வசித்து வருபவர் பாகிரதி அம்மாள். இவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறுவயதிலிருந்தே பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போயுள்ளது. பின்னர் சாதாரண மற்ற பெண்களைப் போலவே அக்காலகட்டத்தில் சிறுவயதில் நடைபெறுவது போலவே இவருக்கும் நடந்து உள்ளது. ஆனால் இவருக்கு படிப்பில் அதிக ஆர்வம் உண்டாம்.

எப்படியும் படிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருப்பாராம். இதற்கிடையில் கேரள அரசின் முறையான கல்வி முறைக்கு சமமான மாற்றுக் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை அறிந்து கேரளா எழுத்தறிவு கல்வி இயக்கம் நடத்திய சமச்சீர் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார். இந்த தேர்வில் மொத்தம் 19 ஆயிரத்து 950 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக இதுபோன்ற தேர்வில் கலந்து கொண்டவர்களில் வயது முதியவராக கருதப்பட்டவர் ஆலப்புலாவை சேர்ந்த கார்த்திகாயினி. இவருக்கு 96 வயது அன்றைய நாளில் 43 ஆயிரத்து 300 பேர் கலந்து கொண்ட அந்த தேர்வில் நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்து இருந்தார். அந்த நிகழ்வை சாதனையாக கருதப்பட்ட இந்த ஒரு தருணத்தில் தற்போது 105 வயதாகும் பாகிரதி தேர்வு எழுதி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.