100 ஆண்டை கடக்கும் இந்திய ஆப்பிள் .......!!!

எல்லோருக்கும் பிடித்த ஆப்பிள் விளையும் இடம் கண்டிப்பா தென்னிந்தியா கிடையாது. வட மாநிலமான இமாச்சலப்பிரதேசத்தில் அதிகம் விளையும் ஆப்பிள் எத்தனை ஆண்டுகளாக, இந்தியாவில் விளைச்சலை கொடுத்து வருகிறது என தெரியுமா......

அதாவது, 1916 ஆம் ஆண்டு அமெரிக்காவிருந்து தான் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திற்கு முதல் முதலாக ஆப்பிள் வந்திருக்கிறது. அன்று முதல் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் தொடர்ந்து ஆப்பிள் விளைச்சல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே ஆசியாவில் ஆப்பிள் விளையத்தொடங்கியுள்ளது.பின்னர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்ற பிறகு, அமெரிக்காவிலும் ஆப்பிள் விளைச்சல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு முடிய, இந்தியாவில் ஆப்பிள் விளைச்சல் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.......