காலை மாலை என இருவேளையும் காபி, டீ, பால் என குடித்து பழகிய நமக்கு உடலை கட்டுக்கோப்பா வெச்சிருக்க பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. சரி வாங்க விஷயத்தை பார்க்கலாம்.

இந்த பத்து ஜூஸ் ஐட்டம் குறிச்சி வச்சிகோங்க... உங்க உடம்பு சும்மா சிக்குன்னு இருக்கும்...

கேரட் ஜூஸ்

தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதால் மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் உடலுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைக்குது. அதனால் நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியை வைத்திருக்கும்.

ஃபுரூட் அண்ட் நட் ஜூஸ்

ஒரு கப் ஆப்பிள் ஜூஸ் உடன் வாழைப்பழம் சேர்த்து, தினமும் அருந்தி வரலாம். இதனுடன் நட்ஸ் சேர்த்து கொள்ளலாம். இது உடலுக்கு நல்ல ஊட்டச் சத்தை தருகிறது.

பீட்ரூட் ஜூஸ்:

ரத்த சூழச்சி சீராக்கும், ரத்தம் அதிகரிக்கும், இதயம் மூளை உள்ளிட்ட பாகங்களை சுறுசுறுப்பாக இயங்க செய்யும்.

  கிரீன் ஜூஸ்:

வெள்ளரி, புதினா, கொத்தமல்லி, காய்கறிகள் அல்லது காய் கறிகள் கலந்த சூப் செய்து வாரத்தில் ஒரு முறையாவது குடித்து வந்தால் இவை மூளை செல்களை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.

மாதுளை ஜூஸ் :

மாதுளை தினமும் சாப்பிட்டு வந்தால், மூளை செல்களை நன்றாக இயங்க வைப்பதோடு, புற்று நோய் வருவதை தடுக்கும்.

கிரான் பெர்ரி ஜிஸ்:

இதில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ப்ளூ பெர்ரி ஜூஸ்:

விட்டமின் சி, மற்றும் நார் சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது 

செர்ரி ஜூஸ்: 

நோயால் பாதிக்கப்படும் போது எந்த வித வீக்கமும் வராமல் தடுக்கும்.

அக்கே பெர்ரி ஜூஸ்:

மற்ற பழங்களை விட அதிக ஊட்டச்சத்து மிக்க இந்த பழம், கடைகளில் பவுடர் போன்று விற்பனை செய்யப்படுகிறது. இதனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடல் பிரச்சனைகள் சீராகும்.

சிவப்பு திராட்சை ஜூஸ்:

தோல் நோய் வராமல் பாதுகாப்பதோடு, உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.