Asianet News TamilAsianet News Tamil

ஷாக்! உணவுக்காக ஒவ்வொரு ஆண்டும் அதிகம் கொல்லப்படும் உயிரினம் இதுவா..?

நாம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுக்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 10,000 கோடி விலங்குகள் கொல்லப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. 

10 billion animals are killed for meat every year in tamil mks
Author
First Published Jan 23, 2024, 6:09 PM IST

யாருக்கு தான் சாப்பிட பிடிக்காது?அதுவும் அசைவம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு அசைவ பிரியர்கள் ஏராளமானோர் உள்ளன. உலகளவில் பெரும்பாலும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அசைவம் என்று கூட சொல்லலாம்.. அவற்றின் மனமும் சுவையும் தான் இதற்கு காரணம் என்று சொல்லலாம். அசைவம் என்றாலே, கோழி, ஆடு, மாடு, என நம் கண்ணில் படும் அனைத்தையும் சாப்பிடுகிறோம். இப்படி நாம் சாப்பிடும் உணவுக்காக ஆண்டுக்கு எத்தனை விலங்குகள் கொள்ளப்படுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா..? அதிலும் எந்த உயிரினம் முதலிடத்தில் உள்ளது தெரியுமா...? இதற்கான பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, தொடர்ந்து படியுங்கள்..

உங்களுக்கு தெரியுமா நாம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுக்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 10,000 கோடி விலங்குகள் கொல்லப்படுவதாக, 'தி எகனாமிஸ்ட்' என்ற செய்தி நிறுவனம் தான் இது குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆக, ஆண்டொன்றுக்கு 1900 கோடி கோழிகளும், 150 கோடி மாடுகளும், 100 கோடி ஆடுகளும், 100 கோடி பன்றிகளும் அசைவ உணவுக்காக கொல்லப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து பிற விலங்குகளும் உணவுக்காக கொள்ளப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட உணவுக்காக மனிதர்களால் அதிகம்  பலியிடப்படும் ஒரு உயிரினம் எதுவென்றால் அது 'கோழி' தான்.

தெரியுமா, நாளொன்றுக்கு மட்டும் 20 கோடிக்கும் அதிகமாகவும், ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோழிகள் உணவுக்காக கொல்லுகின்றன. இதுபோல, ஆண்டொன்றுக்கு 50 ஆயிரம் ஆமைகளும், 83 ஆயிரம் முதலைகளும், 1 லட்சம் எருமை மாடுகளும் மற்றும் 8 லட்சம் ஒட்டகங்கள், 50 லட்சம் குதிரைகள் உணவுக்காக கொல்லப்படுவதாக அறிக்கையில் கூறுகின்றன. அதுபோல, நாய்கள், புறாக்கள், சுறா உள்ளிட்டவைகளும் உணவுக்காக அதிக எண்ணிக்கையில் மனிதர்களால் வேட்டையாடப்படுவதாக தகவல்கள் கூறுகிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், 'சீனா' தான் உலகளவில் அதிகளவு அசைவ உணவை எடுத்துக் கொள்ளும் நாடாக திகழ்கிறது. மேலும் உலகின் ஒட்டுமொத்த அசைவு உணவு நுகர்வில், சீனா தான்  25 சதவீதத்திற்கும் அதிகமாக பங்கு இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios