Asianet News TamilAsianet News Tamil

CAA வால் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு இந்திய குடிமகனை காண்பி.... ஒரு கோடி பரிசு உனக்கு தான்..! பகீர் சவால் விடும் வழக்கறிஞர்..!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் கொண்டு வந்தது.இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என இந்தியா முழுக்க எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினர்.

1 crore gift announced if we proved anyone affected by CAA
Author
Chennai, First Published Jan 31, 2020, 5:29 PM IST

CAA  வால்  பாதிக்கப்பட்ட ஒரே ஒரு  இந்திய குடிமகனை  காண்பி.... ஒரு கோடி பரிசு உனக்கு தான்..! பகீர் சவால் விடும் வழக்கறிஞர்..! 

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய குடிமகன்களில் யாரேனும் ஒருவர் பாதிப்படைந்து உள்ளார் என ஆதார பூர்வமாக நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்  பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே தங்கவேல்  வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.

1 crore gift announced if we proved anyone affected by CAA

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் கொண்டு வந்தது.இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என இந்தியா முழுக்க எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினர். குறிப்பாக தமிழகத்தில் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் பேரணியை நடத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மக்களுக்கு திருத்தப்பட்ட குடி உரிமை சட்டம் குறித்த விளக்கத்தை துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறது.

1 crore gift announced if we proved anyone affected by CAA

இது ஒரு பக்கம் இருக்கும் போது மற்றொரு புறம் திருத்தப்பட்ட குடி உரிமை சட்டத்தால் இந்திய குடிமகன் யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என கம்பீரமாக, தைரியமாக, நம்பிக்கையாக,ஆவேசமாக சவால் விடுத்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் தங்கவேல். இவருடைய இந்த அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் இதுவரையிலும் இதை நிரூபிக்க யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. அப்படி என்றால் ஒரு கோடி பரிசு பெறுவது... ஒருத்தரும் இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது இது குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் தொடங்கி உள்ளது என்றே கூறலாம்

Follow Us:
Download App:
  • android
  • ios