தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ZEE5-ன் புதுமையான தளமான ஹிப்பியில் இந்தியர்கள் தங்களது திறமைகளை வீடியோ வடிவில், அதுவும் தங்கள் சொந்த மொழியில் வெளியிடலாம். இங்கு எந்த பயமோ, தடையுமின்றி ஃபன் சேலஞ்களில் பங்கேற்கலாம், உங்களுக்கு பிடித்தமான பிரபலங்களுடன் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கலாம். இவைஎல்லாம் தான் ஹிப்பியை படைப்பாளர்களை ஈர்க்கும் ஒரு தளமாக ஆக்குகிறது.

ஹிப்பியில் பயனாளர்கள் 90 விநாடிகள் வரை குறுகிய வீடியோக்களை உருவாக்கலாம், அதன் பின்னணியில் இசையை சேர்க்கலாம், பில்டர்கள் மற்றும் விஷவல் எபெக்ட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஹிப்பியில் 100க்கும் மேற்பட்ட பில்டர்களும், எபெக்ட்ஸ்களும் உள்ளன. அதனை உங்கள் வீடியோவில் சேர்த்து ஹிப்பி தளத்தில் பதிவிடலாம். வெறும் பிரவுஸ் செய்ய விரும்புவோருக்காக பல பிரத்யேகமான தலைப்புகள் மற்றும் சுவாரஸ்யமான வகைகள் உள்ளன. அதனால் தற்போது நீங்கள் வீடியோவை உருவாக்கும் மனநிலையில் இல்லை என்றால், பிற பயனாளர்கள் வெளியிட்டுள்ள வீடியோக்களை பார்த்து அதிலிருந்து புது உத்வேகம் பெறலாம்.

இந்த ஆப்பில் மற்றொரு தனித்துவமான வசதி என்னவென்றால், பயனாளர்கள் தங்களது வீடியோக்களை பதிவிடுவதற்கான முழு பாதுகாப்பு சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பில் ட்ரோல் செய்யப்படுவது மற்றும் வெறுக்கத்தக்க மெசேஜ்கள் எதுவும் பகிராமல் இருப்பதை உறுதிபடுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை மனதில் கொண்ட நிறைய பயனாளர்கள் ஹிப்பி பயன்படுத்தி தங்கள் புதிய வீடியோக்களை வெளியிட முடிவெடுத்திருக்கின்றனர்.

நிறைய பிரபலங்களும் தங்களுடைய ஃபன் வீடியோ மற்றும் உரையாடல்கள் மூலமாக ரசிகர்களுடன் இணைந்திருக்க ஹிப்பியில் இணைந்துள்ளனர். ஹிப்பியை அறிமுகப்படுத்திய 2 வாரங்களிலேயே உணவு, காமெடி, உடற்பயிற்சி, அழகு, தொழில்நுட்பம், நாடகம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மக்களிடையே செல்வாக்கு பெற்றவர்கள், பிரபலங்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர் . இதனால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான பிரபலங்களுடன் குறுகிய வீடியோக்கள் மற்றும் மேஷ் அப் வீடியோக்களையும் இணைந்து உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. அனைவரும் பார்க்கும் ஒரு வீடியோவில் தங்களுக்கு பிடித்த பிரபலத்துடன் சேர்ந்து தோன்றுவதை விட சந்தோஷமான விஷயம் வேறென்ன இருக்கிறது?. இது பயனாளர்கள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தன்னை பாலோயர்களாக மாற்ற உதவுகிறது.

சுய வெளிப்பாட்டை ஊக்குவிக்கும் ஹிப்பி , படைப்பாற்றலை ஊக்குவிக்கும் ஒரு தளத்தை தேடும் திறமையான மற்றும் மாறுபட்ட உள்ளடக்க படைப்பாளர்களை அழைப்பதன் மூலம் இந்த நாட்டில் உள்ள திறமையாளர்களை அடையாளம் காண்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது உற்சாகமான பல்வேறு சேலஞ்கள் மூலமாக பயனாளர்கள் மீது மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கிறது. மேலும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் விதமாக டிஜிட்டல் ஆடிஷன்களையும் நடத்துகிறது.

ஹிப்பியைப் பற்றி சொல்ல வேண்டிய மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த தளம் முற்றிலும் இந்தியாவைச் சார்ந்தது. இந்தியாவையும் அதன் கலாச்சாரத்தையும் மனதில் கொண்டதால் இது அனைவரையும் ஒரே போல் பாவிக்கிறது.ஆகையால் தான் இந்து ஒரு படைப்பாளருக்கான சிறந்த தளம் மற்றும் சிறந்த UGC தளமாக விளங்குகிறது. அதை நீங்களும் உணர்ந்து அனுபவிக்க இப்போதே ஹிப்பியை டவுன்லோடு செய்யுங்கள். உடனே ZEE5ல் ஹிப்பியை டவுன்லோடு செய்யுங்கள்.