ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர்.-ன் வாழ்க்கை வாராற்று படமான யாத்ராவின் டீசர் இன்று வெளியிடப்பட்டது

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி எல்லோராரும் பாராட்டப்பட்டது. அதேபோல் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை கதை சஞ்சு என்ற பெயரில் வெளியாகி உள்ளது. 

இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் கபில்தேவ், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, நடிகை ஸ்ரீதேவி, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக்கப்படுகிறது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக, மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கிறார். மகி ராகவ் இந்த படத்திதை இயக்குகிறார். ஒய்.எஸ்.ஆரின் பிறந்த நாளான இன்று இந்த படத்தின் டீசர் வெளியானது. 

எடுகிரி சண்டின்டி ராஜசேகர ரெட்டி என்னும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இரண்டு முறை ஆந்திரவின் முதலமைச்சராக பதவி வகித்தார். 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கர்னூல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒய்.எஸ்.ஆர். மரணமடைந்தார். 
அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு யாத்ரா என்ற படம் உருவாகிறது. இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

இந்த படம் குறித்து இயக்குநர் மகி ராகவ் கூறும்போது, ஒய்.எஸ்.ஆரின் மொத்த அரசியல் வாழ்க்கையை படம் பேசவில்லை. 2003 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் முழுவதும் மேற்கொண்ட பாதயாத்திரை அப்போது அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனை பதிவு செய்யும் விதமாக இந்த படம் இருக்கும். இந்த படத்தில் நடிக்கும் மம்முட்டி, ஒய்.எஸ்.ஆர். கேரக்டரில் சிறப்பாக பொருந்தியிருக்கிறார் என்று இயக்குநர் கூறியுள்ளார்.