Asianet News TamilAsianet News Tamil

போராட்டத்தில் மயங்கிய முதல்வரின் சகோதரி கவலைக்கிடம் - மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை !

தெலுங்கானாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ys sharmila health condition apollo doctors released bulletin
Author
First Published Dec 11, 2022, 8:51 PM IST

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி, ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்ற பெயரில் தனியாக கட்சி நடத்தி வருகிறார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி கடந்த மாதம் இறுதியில், காரில் புறப்பட்டு சென்றார். சர்மிளா காரில் அமர்ந்திருந்த போதே அவரை வழிமறித்து போலீசார் காரை தூக்கிச் சென்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தனது பாத யாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரி சர்மிளா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

Ys sharmila health condition apollo doctors released bulletin

அப்போது திடீரென மயங்கி விழ, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சர்மிளா உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் பலவீனம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !

Follow Us:
Download App:
  • android
  • ios