கோவாவில் வைத்து ஒரு இளம் பெண்ணிற்கு நடந்திருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம், தற்போது அங்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவா கடற்கரையில் வைத்து ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பக்கம் வந்த சஞ்சீவ், தன்ஞ்சேய் பால், ராம், சந்தோஷ் பரியா எனும் நான்குபேர் அடங்கிய குழு, அவர்களின் காதல் காட்சியை ரகசியமாக படம் பிடித்திருக்கின்றனர்.

அதன்பிறகு அந்த வீடியோவை காட்டி அந்த காதல் ஜோடியிடம் பணம் தருமாறு மிரட்டி இருக்கின்றனர். அதற்கு அந்த ஜோடி முடியாது என கூறி பணம் தர மறுத்துவிட்டனர். இதனால் கோபமடைந்த அந்த நால்வரும் காதலனின் முன்னிலையில் வைத்து, அவரின் காதலியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர் அந்த காதல் ஜோடி. அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த சம்பவத்துக்கு காரணமான இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட இன்னும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு, மேலும் ஒரு மோசமான உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த சம்பவம்.