பிறந்தநாள் இறந்த நாளாக மாறிய துயரம் ,பணியில் இருக்கும் போது கிரைண்டரில் துப்பட்டா சிக்கி இளம் பெண் பலி.

கேரள மாநிலம் காசர்கோடு தலப்பாடி பகுதியை சார்ந்தவர் ரஞ்சன் இவரது மனைவி ஜெயஷீலா. இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் ஜெயசீலா வீட்டின் அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல பேக்கரியில் உள்ள கிரைண்டர் ஒன்றில் மாவு அரைத்துக் கொண்டு இருந்துள்ளார். 

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இவர் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா கிரைண்டரில் சிக்கி உள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்த தலப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் அன்றே இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.