young girl escaped from train accident

மும்பை குர்லா ரெயில்நிலையத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்ற இளம்பெண்,ரெயில் மோதியது. இருந்தபோதிலும் அந்த பெண் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த மாதம் 13-ந்தேதி நடந்த போதிலும், இப்போது தான் கண்காணிப்பு கேமிரா காட்சிகள் வௌியாகி உள்ளன.

குர்லா ரெயில் நிலையம்

மும்பை பாந்தராப் பகுதியைச் சேர்ந்தவர் பிரதிக்‌ஷா நடேகர்(வயது19). இவர் தனது நண்பரை பார்க்க கடந்த மாதம் 13 ஆம் தேதி குர்லா ரெயில் நிலையத்திற்கு பகல் 11 மணிக்கு சென்றார்.

காதில் ஹெட்போன்

அப்போது, 9வது பிளாட்பாரத்தில் இருந்த பிரதிக்‌ஷா 7-வது பிளாட்பாரத்தில்இருக்கும் தனது நண்பரைப் பார்க்க தண்டவாளம் வழியே நடந்து சென்றார். அப்போது காதில் ஹெட்போன் பொருத்திக்கொண்டு பேசியபடி தண்டவாளத்தை கடந்தார்.

தப்பிக்க முயற்சி

அப்போது எதிர்பாராத நிலையில் சரக்கு ரெயில் ஒன்று அருகில் வந்தபோது, பிரதிக்‌ஷாவுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, தண்டவாளத்தில் இருந்து வௌியே ஓடி தப்பிக்க முயன்றார். ஆனால் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

ரெயில்மோதியது

இதை பிளாட்பாரத்தில் நின்று இருந்த பயணிகள், அந்த இளம் பெண் கண்முன்ரெயிலில் அடிபட்டு சாவதைப் பார்த்து அலறினர். அவர்கள் நினைத்ததைப் போல் ரெயில், பிரதிக்‌ஷா மீது மோதியது. ஆனால், ரெயில்வே தண்டவாளங்களில் நடுவில் நின்றிருந்த பிரதிக்‌ஷா மீது ரெயில் மோதி சில அடி தூரம் கடந்து சென்று நின்றது. இதைப் பார்த்த பயணிகள் அலறி அடித்து, தண்டவாளத்தைப் பார்த்தபோது, பபிரதிக்‌ஷா உயிருடன் கீழே கிடந்தார்.

உயிர்தப்பினார்

பிரதிக்‌ஷா தண்டவாளங்களுக்கு இடையே விழுந்து கிடந்ததால் தலை, மற்றும் கண்ணில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். ரெயிலில் அடிபட்டும் இளம் பெண் உயிர்பிழைத்த சம்பவம் மிகப்பெரிய ஆச்சர்யத்தைஏற்படுத்தியுள்ளது.