Yogi: போலீஸ் டிஎஸ்பி சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம்: உ.பி முதல்வர் ஆதித்யநாத் அதிரடி: முழுவிவரம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளரை காவல் உதவி ஆய்வாளராக பதவி இறக்கம் செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளரை காவல் உதவி ஆய்வாளராக பதவி இறக்கம் செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ராம்பூர் மாவட்டத்தில் நடந்த கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில், காவல்துணைக் கண்காணிப்பாளர் வித்யா கிஷோர் ஷர்மா ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியானதையடுத்து, அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி ஏற்புக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணை
துணைக் கண்காணிப்பாளர் வித்யா கிஷோர் ஷர்மா லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் வெளியே கசிந்தவுடன் சஸ்பெண்ட் மட்டும் செய்யப்பட்டிருந்த கிஷோர் ஷர்மாவை பதவி இறக்கம் செய்து முதல்வர் ஆதித்யநாத் உத்தரவி்ட்டார்.
இனிமேல் கிஷோர் ஷர்மா மீண்டும் ஆய்வாளர் அந்தஸ்துக்கு உயர்வதற்கு 10 முதல் 12 ஆண்டுகள் தேவைப்படும். இந்தத் தகவலை உத்தரப்பிரதேச அரசு தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.
நிலக்கரி ஊழல்: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப்பிரிவு சம்மன்
ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் ராம்வீர் யாதவ், மருத்துவமனை மேலாளர் வினோத் யாதவ் ஆகியோரால் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது ராம்பூரில் காவல் துணைக் கண்காணிப்பாளராக கிஷோர் ஷர்மா இருந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராம்வீர் யாதவ், மருத்துவமனை மேலாளர் வினோத் யாதவ் ஆகியோர் மீது நடவடிக்கை ஏதும் டிஎஸ்பி கிஷோர் ஷர்மா எடுக்கவில்லை
அதற்கு பதிலாக அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு இந்தவழக்கை மூடிமறைக்கும் பணியில் டிஎஸ்பி கிஷோர் ஷர்மா ஈடுபட்டார். இந்த தொடர்பான விவகாரம் வெளியே கசிந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது, வீடியோ ஆதாரங்களும் வெளியாகின.
இதையடுத்து, கடந்த 2021 ஆண்டுடிசம்பர் மாதம் டிஎஸ்பி கிஷோர் ஷர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உ.பி. அரசு உத்தரவிட்டது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் ராம்வீர் யாதவ், மருத்துவமனை மேலாளர் வினோத் யாதவ் ஆகியோர் கைது செ்யயப்பட்டனர். விசாரணையில் டிஎஸ்பி கிஷோர் ஷர்மா ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றது உண்மை எனத் தெரியவந்தது.
குடிசைவாழ் ஏழைகளுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வீடுகள்: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
அது மட்டுமல்லாமல் ராம்பூர் மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராக கிஷோர் ஷர்மா இருந்தபோது, ஏராளமான வழக்குகளில் லஞ்சம் பெற்று வழக்கை மூடி மறைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த கிஷோர் ஷர்மாவை காவல் உதவி ஆய்வாளராக பதவி இறக்கம் செய்து முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
மேலும், காவல் உதவி ஆய்வாளராக இருந்த, ராம்வீர் யாதவ் போலீஸ் கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்யப்பட்டார்.பதவி இறக்கம் செய்யப்பட்ட கிஷோர் ஷர்மா மீண்டும் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக வருவதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
- DSP Vidya Kishore Sharma
- Rampur district
- Vidya Kishore Sharma
- Yogi Adityanath
- chief minister yogi adityanath
- cm yogi adityanath
- up cm yogi adityanath
- yogi adityanath interview
- yogi adityanath latest
- yogi adityanath latest news
- yogi adityanath latest speech
- yogi adityanath news
- yogi adityanath speech
- yogi adityanath updates
- yogi adityanath video