நேபாளத்தில் 72  பேருடன் சென்ற எட்டி விமானம் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நேபாள நாட்டில் 72 பேருடன் சென்ற விமானம் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனினும், 72 பேரின் நிலை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை. நேபாளத்தில் காத்மண்டுவிலிருந்து பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு 68 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் என்று மொத்தமாக 72 பேருடன் சென்ற எட்டி விமானம் (Yeti Airlines) ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதோடு விமானம் தீப்பிடித்து எரிந்ததில் விமானத்தில் சென்ற பயணிகளின் நிலை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை.

Scroll to load tweet…

தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக பொக்காரா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…

டாப் டிரெண்டிங்கில் பொங்கல்: உலக தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆதரவற்ற முதியவர்களோடு பொங்கல் கொண்டாடிய கலெக்டர்