World Food Safety Day 2: பாதுகாப்பான உணவே சிறப்பான ஆரோக்கியம்.. இன்று சர்வதேச உணவு பாதுகாப்பு தினம்...!

உணவு பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மீது கவனம் எழுப்பப்பட்டு வருகிறது.

 

World Food Safety Day 2022 Significance, History and Importance

மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும், உணவு சார்ந்த பாதிப்புகளை கண்டறிந்து, தவிர்க்க செய்யும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி சர்தேச உணவு பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பாதுகாப்பற்ற உணவால் ஏற்படும் விளைவுகள், அன்றாட வாழ்வில் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

மனிதர்கள் உடல் ஆரோக்கியத்துடன், பொருளாதார சிக்கல் இன்றி, விவசாய வளர்ச்சி மற்றும் சுற்றுலா என பல துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை பெற உணவு பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இதன் மூலம் சுகாதாரம் அற்ற உணவுகளால் ஏற்படும் நோய்கள், உடல்நல கோளாறு உள்ளிட்டவைகளை தவிர்க்க முடியும். இந்த நாளில் உணவு பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மீது கவனம் எழுப்பப்பட்டு வருகிறது.

World Food Safety Day 2022 Significance, History and Importance

சர்வதேச உணவு பாதுகாப்பு தின கொள்கை:

இந்த ஆண்டிற்கான சர்வதேச உணவு பாதுகாப்பு தின கொள்கை, “பாதுகாப்பான உணவு, சிறப்பான ஆரோக்கியம்” ஆகும். இதனை உலக சுகாதார மையம் அறிவித்தது. மேலும் பாதுகாப்பான உணவு மட்டும் தான் சிறப்பான ஆரோக்கியத்தை வழங்க முடியும் என உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. 

பாதுகாப்பான உணவின் மூலம் கிடைக்கும் பலன்களை கொண்டாடும் நோக்கில், டிசம்பர் 20, 2018 ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சபையில் சர்வதேச உணவு பாதுகாப்பு தினம் அறிவிக்கப்பட்டது. உலக சுகாதார மையம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, விவசாய அமைப்பு  கூட்டாக சேர்ந்து சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தை அனுசரிப்பதை வலியுறுத்தின.

குறிக்கோள்:

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 மில்லியன் பேருக்கு உணவு சார்ந்த உடல் நல குறைபாடு ஏற்பட்டு வருகிறது. இது மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் அச்சுறுதுத்தலான ஒன்றாக விளங்குகிறது. இதுபோன்ற குறைபாடுகள் கெட்டுப் போன உணவு மற்றும் தண்ணீரில் உள்ள பாராசைட், வைரஸ் மற்றும் கிறுமிகளால் ஏற்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios