இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் எத்தனை வகை பிரியாணிக்கள் கிடைக்கின்றன என்று தெரியுமா?

நம் நாட்டில் அனைவருக்கும் பிடித்தமான உணவுகளில் பிரியாணிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதுவும் சமீப காலங்களில் ஏற்பட்டு இருக்கும் பிரியாணி டிரெண்ட், அதனை உணவு என்று மட்டும் இல்லாமல் எமோஷனாக மாற்றி விட்டது. பலருக்கும் பிரியாணி என்றே சொன்னாலே பிடிக்கும். சிலருக்கு இந்த வார்த்தை மனதில் இருக்கும் கவலைகளை போக்கி, மகிழ்ச்சியை உடனடியாக கொண்டு வந்து சேர்த்து விடும். 

பிரியாணியில் உள்ள பிளேவர்கள், டெக்ஸ்ச்சர் மற்றும் மசாலா வாசனை இதை தவிர்க்க முடியாத உணவாக மாற்றி விட்டது. ஆன்லைன் பிரபலங்களாக மாறி வரும் ஃபுட்டிஸ் (foodies) மத்தியில் பிரியாணி ஒரு தலைப்பாகவும் மாறி இருக்கிறது. இந்த ஆண்டு சர்வதேச பிரியாணி தினம் இன்று (ஜூலை 3 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், அனைவரும் நிச்சயம் ருசிக்க வேண்டிய ஏழு வகை பிரியாணி பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

1- காஷ்மீர் ஸ்டைல் பிரியாணி:

நன்கு வேக வைக்கப்பட்ட ஆட்டுக் கறி, ரோஸ் கலரிங் சேர்க்கப்பட்ட அரிசி மற்றும் தாழம்பூ எசன்ஸ் சேர்க்கப்பட்டு காஷ்மீர் ஸ்டைல் பிரியாணி சமைக்கப்படுகிறது. இதில் உள்ள ஆட்டுக் கறி சுவை, அரிசி மற்றும் மசாலா வாசம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

2- மட்டன் மந்தி பிரியாணி:

இந்திய பண்டிகை காலங்களுக்கு பெயர் பெற்ற உணவு மந்தி பிரியாணி. மட்டன் மந்தி பிரியாணி சுவையை கூட்ட இதில் மட்டன் ஸ்டாக் எனப்படும் வேக வைக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது மந்தி பிரியாணி சுவையை அலாதியாக்கி விடும்.

3 - கொல்கத்தா சிக்கன் பிரியாணி:

விசேஷமான பெங்கால் பிரியாணி மாசாலா மற்றும் உருளைக் கிழங்குகளை கொண்டு பாரம்பரியம் மிக்க கொல்கத்தா ஸ்டைல் பிரியாணி சமைக்கப்படுகிறது. இந்த பிரியாணியில் பெங்கால் மசாலா அனைவருக்கும் பிடிக்கும்.

4 - ஹைதரபாத் தம் பிரியாணி:

இந்த வகை பிரியாணி அனைவரும் அறிந்து இருப்பர். உலகம் முழுக்க ஹைதராபாத் தம் பிரியாணி பிரியர்கள் உள்ளனர். இது உலகளவில் புகழ் பெற்ற உணவு வகை என்றும் கூறலாம். இதில் கோழி இறைச்சி பிரியாணி அண்டாவின் கீழ் பகுதியில் மட்டுமே இருக்கும். இதன் மீது அரிசி சாப்பாடு இருக்கும்.

5 - மலபார் மீன் பிரியாணி:

தென் பகுதி சுவை உங்களுக்கும் பிடிக்கும் என்றால், மலபார் மீன் பிரியாணியை நிச்சயம் ருசித்து பார்க்க வேண்டும். மலபார் மீன் பிரியாணி உடன் ரைத்தா வைத்துக் கொண்டு சாப்பிடும் போது அதன் சுவை மேலும் நிறைவை தரும். 

6 - கத்தல் பிரியாணி:

கத்தல் பிரியாணி சைவம் மற்றும் அசைவம் என இருவகை உணவு பிரியர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். சீராக சமைக்கப்பட்ட கத்தல், மசாலா மற்றும் அரிசி இணைந்து இந்த பிரியாணியின் சுவையை தனித்துவம் மிக்கதாக மாற்றுகிறது.

7 - வெஜ் தம் பிரியாணி:

பல்வேறு காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படுவது தான் வெஜ் பிரியாணி. சைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவாக வெஜ் தம் பிரியாணி உள்ளது.