தூங்கிக்கொண்டிருந்த கணவன்.. கத்தியால் குத்திய மனைவி - எதனால் தெரியுமா? போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Bengaluru : தூங்கிக்கொண்டிருந்த கணவனை கத்தியால் குத்திய வழக்கில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண நாளன்று பரிசு கிடைக்காததால் ஆத்திரமடைந்த இல்லத்தரசி ஒருவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து பெல்லந்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த கணவர் 37 வயதான கிரண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இவரது மனைவி 35 வயதான சாந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
கத்தியால் குத்தப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த நபர் போலீசாரிடம் அளித்த தகவலில், கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி விடியற்காலை 1:30 மணி அளவில் தனது மனைவி சந்தியா சமையலறையில் இருந்த ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு அவருடைய கையில் குத்தியதாக கூறியுள்ளார்.
இந்தியா ஒரு நாடு அல்ல.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக எம்பி ஆ.ராசா.. குவியும் கண்டனங்கள்!
அப்போது தான் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார். மனைவியின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த கிரண், உடனடியாக அவரை தள்ளிவிட்டதாகவும், மேற்கொண்டு தன்னை தாக்காமல் இருக்க வீட்டை விட்டு வெளியேறி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் கூறியுள்ளார்.
அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததோடு, அது ஒரு கத்தியால் குத்தப்பட்ட காயம் என்பதினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை அறிந்து வந்த போலீசார், கடந்த மார்ச் 1ம் தேதி சந்தியா மீது வழக்கு பதிவு செய்தனர். இது குடும்ப விவகாரம் என்பதனால் அந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருக்குள் பேச்சுவார்த்தை நடத்த ஒரு வாய்ப்பினை போலீசார் அளித்துள்ளனர்.
அப்பொழுது தான் திருமண நாள் அன்று தனக்கு பரிசு தராத ஆத்திரத்தில் அவ்வாறு செய்துவிட்டதாக சந்தியா என்ற அந்த பெண் கூறியுள்ளார். மேலும் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளைஞர் உயிரை காவு வாங்கிய ரூ.10 லட்சம் மதிப்புள்ள கேமரா.. ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!