கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டுவரை ரெயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை 35 சதவீதம் உயர்ந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் அவையில் ேகள்வி ஒன்றுக்கு பதில் அளித்து ரெயில்வே துறையின் இணை அமைச்சர் ராஜன் கோகெயின் நேற்று கூறியதாவது-

கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை ரெயில்களில் பெண்களுக்கு எதிராக 1,607 குற்றங்கள் நடந்துள்ளன. இதில் 2014ம் ஆண்டு 448 வழக்குகளும், 2015ம் ஆண்டு 553 வழக்குகளும், 2016ம் ஆண்டு 606 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 1,216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரெயில்வேயை துறையில் பாதுகாப்பை கவனிப்பது என்பது மாநில அரசின் பொறுப்பு. குற்றங்களை தடுப்பது, வழக்குகளை பதிவு செய்வது, விசாரணை செய்வது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது ஆகியவை மாநில அரசுக்குள்நடக்கும் போது அது அவர்களிம்  பொறுப்பாகும். இதை அரசு ரெயில்வே போலீஸ் மூலம்(ஜி.ஆர்.பி.) கடைபிடிக்க வேண்டும்.

ரெயில்வே பாதுகாப்பு படையினர் என்பது, ஜி.ஆர்.பி. போலீசாருக்கு உதவுவார்கள். ரெயில்வே அமைச்சகம் பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்ைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

முக்கியமான வழித்தடங்களில் ஓடும் ரெயில்களில் ஜி.ஆர்.பி., ஆர்.பி.எப். போலீசாரை அதிகமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு உதவ உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன, பெண்கள் பயணிக்கும்  பெட்டியில் ஆண்கள் பயணிக்க தடை செய்யப்பட்டுள்ளனர்.

334 ரெயில்நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறப்பு மகளிர் ரெயில்களில் பாதுகாப்புக்காக பெண் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.