ஃபேஸ்புக் மூலம் நட்பாக பழகி காதலிப்பதாக கூறி பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள காட்டாக்கடை பகுதியை சேர்ந்தவர் கோகுல் கிருஷ்ணா 23 வயதான இவர். கோட்டயம் அருகேயுள்ள வைக்கத்தை சேர்ந்த பிளஸ்2 மாணவிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.  அந்த பழக்கம் நட்பாகி நட்பு காதலாகியுள்ளது.

இந்நிலையில், வீட்டுக்கு அழைத்து சென்றால் பெற்றோரிடம் மாட்டிகொள்வோம் என அறிந்த கோகுல் காட்டாக்கடை பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு மாணவியை அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியிருக்கிறார். அவர்கள் வைக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த கோகுலை போலீசார் கைது செய்தனர்.