Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுக்கு எதிரான ஜிஹாத் அறிக்கையை திரும்பப் பெறுங்கள்… மம்தாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!!

பாஜகவுக்கு எதிரான ஜிஹாத் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மம்தாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். 

withdraw jihad report against bjp west bengal governor wrote letter to mamta
Author
West Bengal, First Published Jun 30, 2022, 10:22 PM IST

பாஜகவுக்கு எதிரான ஜிஹாத் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மம்தாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மம்தா, திரிணாமுல் காங்கிரஸ் ஆண்டுதோறும் கடைபிடிக்கும் மாவீரர் தினம், தியாகிகள் தினம் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறவில்லை எனவும் இந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த தியாகிகள் தினத்தில் பாஜகவுக்கு எதிரான ஜிகாத்தை நாம் பிரகடனப்படுத்துவோம், மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த உறுதியேற்போம் என தெரிவித்திருந்தார்.

1993 ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் சிபிஐ தலைமையிலான இடதுசாரி முன்னணியில் பானர்ஜி இருந்தபோது நடைபெற்ற பேரணியின் போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21 ஆம் தேதியை தியாகிகள் தினமாக திரிணாமுல் காங்கிரஸ் அனுசரிக்கிறது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே… துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு!!

withdraw jihad report against bjp west bengal governor wrote letter to mamta

இந்த நாளை பிஜேபிக்கு எதிரான ஜிகாத் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று மம்தா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். மம்தாவின் இந்த கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பாஜகவுக்கு எதிரான தனது ஜிகாத் அறிக்கையை மம்தா பானர்ஜி திரும்பப் பெற வேண்டும் என்று மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் திருப்புமுனை... முதல்வர் ஆகிறார் ஏக்நாத் ஷிண்டே!!

இதுக்குறித்து அவர் மம்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது ஜனநாயகத்தின் சாவு மணியைக் குறிக்கிறது. ஒரு முதல்வர் எப்படி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட முடியும். இந்த அறிக்கை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசியலமைப்பு அராஜகத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது. எனவே பாஜகவுக்கு எதிரான ஜிஹாத் அறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ், பாஜகவின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios