கள்ளகாதல் உறவை கணவன் கண்டித்ததால், கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கணவரை சயனைடு வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கோண்டா அப்பனா கடந்த வாரம் தன்னுடைய தந்தையுடன் இணைந்து மது அருந்தியப்போது மர்மம்மான முறையில் இறந்தார்.

அப்பானாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் இதனை கொலை வழக்காக பதிவு செய்து அனைவரையும் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். 

இந்த விசாரணையில், அப்பானாவின் மனைவி நாகமணி முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். அவர் மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் அவரை தீவிரமாக விசாரணை செய்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

27 வயதாகம் நாகமணிக்கும், வீட்டின் அருகே வசித்து வரும் 22 வயது இளைஞர் வரதிகுமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. நாகமணி வரதிகுமாரை சந்திக்க வேண்டும் என்றால் கணவர் அப்பானாவிற்கு மதுவில் தூக்கு மாத்திரை கலந்துக்கொடுத்து விட்டு, வரதிகுமாரை சந்திப்பதையும் அவருடன் தனிமையில் இருப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 

ஒரு நிலையில் இது குறித்து கணவருக்கு தெரியவந்ததும், நாகமணியை கண்டித்துள்ளார். இதனால் கள்ளகாதளுக்கு தடையாக இருக்கும், கணவர் அப்பானாவை கொலை செய்ய இருவரும் திட்டம் போட்டு மதுவில் சயனைடு கலந்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

தற்போது நாகமணியையும், வரதிகுமாரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.