கர்ப்பிணி மனைவிக்கு ஆசையாக கணவர் கொடுத்த முத்தம் நல்லா இல்லை என அவரது நாக்கை  கோபத்தில் கடித்து துப்பிய மனைவியால் பெரும் பரபரப்பு எற்பட்டது

டெல்லிக்கு அருகே உலா ரானோலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் சப்தர்ஜங். இவருக்கு கடந்த 2016 ஆம்  ஆண்டு, நவம்பர் 20 ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. இவர்கள் இருவரும், திருமணமான நாட்கள் முதலே அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள தெரிவிக்கின்றனர்.

இந்நலையில், இவர் கர்ப்பமாகி உள்ளார். தன் மனைவி கர்ப்பமாகி உள்ளதை பார்த்து ஆசையாய் அவருக்கு முத்தம் கொடுத்து உள்ளார். ஆனால் மனைவி அவர் மீது கோபமாய், அவருடைய நாக்கை கடித்து துப்பி உள்ளார். அவர் அழகாக முத்தம் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் தன் கணவரின் நாக்கை கடித்து துப்பி  உள்ளதாக அவரே தெரிவித்து உள்ளார் 

பின்னர் வலியால் துடித்து போன அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். பரிசோதனை செய்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி உள்ளதாகவும், அதே சமயத்தில் அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் அவரால் பேச முடியுமா என்பது சந்தேகம் என்று  மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.