ஜி 20 சுகாதார கூட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை புகழ்ந்து தள்ளிய உலக சுகாதார மைய இயக்குனர் ஜெனரல்!!

ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தை உலக சுகாதார மையத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பாராட்டினார்.

WHO Chief Dr Tedros Adhanom Praises Ayushman Health Scheme in G20 Health Minister Meeting

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வரும் ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் டெட்ரோஸ் இதை தெரிவித்தார்.

தனது உரையின் துவக்கத்தில் டெட்ரோஸ் அதானோம், ''ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா அளித்த கருணைமிக்க விருந்தோம்பல் மற்றும் தொலைநோக்கு தலைமைக்கு நன்றி'' என்று தெரிவித்தார். "யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் மற்றும் உலகின் மிகப்பெரிய சுகாதார உத்தரவாத முயற்சியான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை முன்னேற்றுவதில் இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். 

"இங்கு காந்திநகரில் இருக்கும் ஒரு உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையத்திற்குச் சென்றேன்.  இங்கு சுகாதாரம் மற்றும் நலத்துறையால் 1000 வீடுகளுக்கு வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவைகளால் ஈர்க்கப்பட்டேன். குஜராத்தில் வழங்கப்படும் டெலிமெடிசின் வசதிகளையும் பாராட்டுகிறேன். இது சுகாதாரத்தை மாற்றியமைப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஜி20 தலைமை ஏற்று, உலக டிஜிட்டல் சுகாதாரத்தை முன்னெடுத்தற்கு நன்றி தெரிவிக்கிறேன்'' என்றார். 

WHO Chief Dr Tedros Adhanom Praises Ayushman Health Scheme in G20 Health Minister Meeting

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், ''இங்குள்ள காந்திநகரில் ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஜி 20 இந்தியா தலைமையின் கீழ் மூன்று நாள் ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்ட் 19 வரை இங்கு நடைபெறும்'' என்றார்.

ஜி20 இந்தியா தலைமையின் கீழ் ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெறுகிறது.

இந்தியா 2022,  டிசம்பர் 1 அன்று ஜி20 -ன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. தற்போது இந்தோனேசியா, இந்தியா மற்றும் பிரேசில் அடங்கிய ஜி20 அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. முதல் முறையாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை உள்ளடக்கியதாக இந்த அமைப்பு உள்ளது.

ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் முக்கிய நோக்கமே சுகாதார அவசரநிலை தடுப்பு, தயார்நிலை, நுண்ணுயிர் எதிர்ப்பு,  சுகாதார கட்டமைப்பில் கவனம் செலுத்துதல், பாதுகாப்பான, பயனுள்ள, தரமான மற்றும் மலிவு மருத்துவ தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் நோய் கண்டறிதல் முறைகளை கண்டறிந்து வலுப்படுத்துதல் ஆகியவையாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios