ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்கள் உலகம் முழுதும் முடங்கியுள்ளன.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தாறுமாறாக அதிகரித்துவருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய 3 சமூக வலைதளங்களும் உலகம் முழுதும் முடங்கியுள்ளன. இவற்றின் திடீர் முடக்கத்தால் சமூக வலைதள வாசிகள் அதிர்ச்சியடைந்ததுடன், பாதிப்பையும் சந்தித்துள்ளனர்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் வேலை செய்யவில்லை என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து மக்கள் டெலிகிராம், சிக்னல் செயலிகளில் தங்களது தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். 

ஏற்கனவே மார்ச் மாதத்தில் சில நிமிடங்கள் 17 நிமிடங்கள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.