whatapp admins very careful and any wrong news dont publish
“வாட்ஸ் அப்” அல்லது “பேஸ்புக்கில்” ஏதாவது ஒரு குரூப்புக்கு அட்மின்னாக இருப்பவர்கள், இனிமேல் அட்மினாக மாறப்போகிறவர்கள் ஒருமுறைக்கு பலமுறை யோசிச்சுகுங்க...
ஏனென்றால்,ஏதாவது புரளிச் செய்தி, பொய்யான விஷயம், அவதூறு செய்தி, மோசமான வீடியோக்களை ஒரு குரூப்பில் இருந்து பரப்பினால், அந்த குற்றமாகும், அந்த குரூப்பின் அட்மினுக்கு சிறை தண்டனை உண்டாம்.
சமூக ஊடகங்கள் நமக்கு பலவசதிகளை அளித்து இருக்கின்றன. நமக்கென்று தனியாக ஒரு குரூப்பை ஏற்படுத்தி, அதில் நம் புகைப்படங்கள், சுவையான செய்திகள், புதியதகவல்கள், கருத்துகளை தெரிவிக்க முடியும். அதேசமயம், பொய்யான செய்திகள், அவதூறு செய்திகள், மார்பிங் புகைப்படங்கள், ஒருவருக்கு மனஉளைச்சல் தரும் வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிடும் போது, மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறோம். சில நேரங்களில் இதுபோன்ற வீடியோக்கள், செய்திகள் இருபிரிவினருக்கு இடையே மோதலைக் கூட ஏற்படுத்தி விடுகிறது.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் “வாட்ஸ்அப்பில்” வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்பிய ஒரு புகார் வாரணாசி மாவட்ட கலெக்டரிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த வழக்ைக விசாரணை செய்த, கலெக்டர் யோகேஸ்வர் ராம் மிஸ்ரா மற்றும், போலீஸ் எஸ்.பி. நிதின் திவாரி தெளிவாக அளித்த உத்தரவில், “உண்மைக்கு மாறான தகவல், புரளி, தவறாக வழிநடத்தும்செய்தி போன்றவற்றை சமூக வலைதளங்கள் குறிப்பாக, வாட்ஸ் அப்,பேஸ்புக் குரூப் வெளியிட்டால், குரூப்அட்மின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யலாம். இதுகுறித்து சைபர் கிரைம் சட்டம், தகவல் தொழில் நுட்பச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் இதை உறுதிப்படுத்தி தெளிவு படுத்தியுள்ளது என்று தெரிவித்தனர்.
மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி. கூட்டாக வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது-
சமூக ஊடகங்களில் பல குரூப்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி பெயர் வைத்து, செய்திகளையும், தகவல்களையும் வெளியிடுகிறார்கள். சில நேரங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை அப்படியே பார்வேர்டு செய்கிறார்கள்.
இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் குரூப்கள் வைத்து இருப்போர், குரூப் அட்மின்களாக இருப்போருக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறோம். இந்தியாவில் 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ் அப், ேபஸ்புக்கில் குரூப் உருவாக்கி இருப்போர், அந்த குரூப்பின் அட்மின்னாக இருப்போர்தான் இனிமேல் அந்த குரூப்பில் வரும் அனைத்து செய்திகளுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
குரூப் அட்மின்னாக இருப்போர், தங்களுக்கு நன்கு தெரிந்தவர், நம்பிக்கைக்கு உரியவர்களை மட்டுமே தங்களின் குரூப்பில் இணைக்க வேண்டும். அந்த குரூப்பில் உள்ள உறுப்பினர் ஒருவர் போலியான செய்தியையோ, மத ஒற்றுமையை குலைக்கும் வித்தில் செய்தியோ, புரளியையோ வெளியிட்டால், அதற்கு உடனடியாக குரூப் அட்மின் மறுப்பு தெரிவித்து, அந்த உறுப்பினரை குரூப்பில் இருந்து நீக்க ேவண்டும்.
அவ்வாறு அவதூறு, வதந்தி பரப்பிய நபரை குரூப் அட்மின் நீக்காவிட்டால், அந்த அட்மின் குற்றம் செய்தவராகிறார், அந்த குரூப் அட்மினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வந்துள்ள அவதாறு, போலி செய்தியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுத்தால், சைபர்கிரைம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அடிப்படையில், குரூப் அட்மின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்களில் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட,தெரிவிக்க உரிமை உண்டு. அதேசமயம், பொறுப்புணர்ச்சியும் அவசியம்.
மேலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள், படங்களை ேவறு எந்த குரூப்பில் இருந்து வந்தாலும், அதை பார்வேர்டு செய்தாலும் அந்த குரூப் அட்மின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
