Asianet News TamilAsianet News Tamil

உ.பி.யில் யோக்கியர்களின் ஆட்சிதான் தேவை.. யோகி ஆட்சி அல்ல.. யோகியை டாராக கிழிக்கும் எதிர்க்கட்சி.!

உத்தரபிரதேசத்து மக்கள் யோக்கியமானர்களின் ஆட்சியைதான் எதிர்பார்க்கிறார்கள். யோகி ஆட்சியை எதிர்பார்க்கவில்லை என்று உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
 

What is needed is the rule of yogis in UP .. not the rule of yogis .. the opposition that is tearing yogis to shreds.!
Author
Lucknow, First Published Oct 18, 2021, 7:45 AM IST

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக இப்போதே அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கட்சித் தாவல்கள், ஆள் பிடிப்புகள் என பலவும் உத்தரப்பிரதேசத்தில் நடக்கின்றன. இந்நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி பலரும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் சேர்ந்தனர். லக்னோவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற அகிலேஷ், செய்தியாளர்களைச் சந்தித்தார்.What is needed is the rule of yogis in UP .. not the rule of yogis .. the opposition that is tearing yogis to shreds.!
அப்போது அவர் கூறுகையில், “மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது உத்தரப்பிரதேசத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது சமாஜ்வாடி கட்சி அதையே விரும்புகிறது. நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டி விட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிக்கிறது. What is needed is the rule of yogis in UP .. not the rule of yogis .. the opposition that is tearing yogis to shreds.!
உ.பி.யில் அடுத்த் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 400 இடங்களில் வெற்றி பெறும். மாநிலத்தை ஆளும் பாஜக அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் விவசாயிகள் விரோத ஆட்சியை நடத்தி வருகின்றன. இந்த இரு ஆட்சிகளுமே பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர். வேலைவாய்ப்பு என்பதே நாட்டில் இல்லாமல் போய்விட்டது. உத்தரபிரதேசத்து மக்கள் யோக்கியமானர்களின் ஆட்சியைதான் எதிர்பார்க்கிறார்கள். மற்றப்படி யோகி ஆட்சியை எதிர்பார்க்கவில்லை” என்று அகிலேஷ் யாதவ் காட்டமாக விமர்சித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios