திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே நடந்த மோதல்களுக்கு பின், மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் தனித்தனியாக, இரு கட்சியினரும் முறையீடு செய்துள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பர்தா சட்டர்ஜி மாநில கவர்னரிடம் முறையீடு செய்த மனுவில் கூறியிருப்பதாவது.

ரோஸ் பள்ளதாக்கு ஊழலில் தொடர்புடைய மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை கைது செய்ய வேண்டும். மாநில அரசிடம் கலந்து ஆலோசனை நடத்தாமல், பா.ஜ.க. அலுவலகங்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசாரை நிறுத்தியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். மத்திய அரசு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைந்து விட்டது என கூறுப்பட்டு இருந்தது.

அதேபோல், பா.ஜ.க. அலுவலகங்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக, பா.ஜ.க. மாநில தலைவர் திலீப் கோஷ், கவர்னரிடம் முறையிட்டுள்ளார்.

அதில், வன்முறை சம்பவங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் நடந்துள்ளன. நாங்கள் ஆட்சி கலைப்பை விரும்பவில்லை. ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது.