Wedding for Irom sharmila
இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் மணிப்பூரைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள் காதலரான இங்கிலாந்தை சேர்ந்த டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார். இவர்களது திருமணம் ஜுலை மாத இறுதியில் தமிழகத்தில் நடைபெறவுள்ளது.
மணிப்பூரில் செயல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக அம்மாநிலத்தில் 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் ஐரோம் ஷர்மிளா.
அண்மையில் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் ஐரோம் ஷர்மிளா தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் வெறும் 90 ஓட்டுகளே பெற்று ஐரோம் ஷர்மிளா தோல்வி அடைந்தார். இதையடத்து அம்மாநிலத்தில் இருந்து வெளியேறி தற்போது கேளைவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ஐரோம் ஷர்மிளா தனது நீண்ட நாள் காதலரான டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார்.
2009ம் ஆண்டு ஐரோம் ஷர்மிளா பற்றி பர்னிங் பிரிட்ஜ் என்ற புத்தகம் வெளியானது. இதை படித்த பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்ட்மான்ட் அவரது போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் ஷர்மிளாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இருவருக்கும் நல்ல நட்பு மலர்ந்தது.2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்த டெஸ்ட்மான்ட் இம்பாலில் இரோம் ஷர்மிளாவை முதல் முறையாக சந்தித்தார். அவர்களது நட்பு காதலாக மாறியது.
முதலில் இருவரும் இங்கிலாந்தில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஐரோமுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் இருவரும் சென்னையில் திருமணம் செய்ய முடிவு எடுத்து உள்ளனர். வரும் ஜுலை மாத இறுதியில் நடைபெறும் என தெரிகிறது.
