ஸ்ரீதேவி மிகவும் அழகான திறமையான நடிகை என்றும், குழந்தைச் சிரிப்பை தவறவிட்டுவிட்டோம் என்று நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் மோஹித் மார்வா திருமண விழாவுக்கு, கணவர் போனி கபூர், மகளுடன் துபாய் சென்றபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

ஸ்ரீதேவியின் இறப்பு இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஸ்ரீதேவி மரணமடைந்துள்ள நிலையில், அவர் நடித்த படங்கள் குறித்து ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு குஷ்பூ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மிகவும் மோசமான செய்தியுடன் இன்றைய நாள் எழுந்து இருக்கிறேன். ஸ்ரீதேவி இனி நம்முடன் இருக்கப்போவதில்லை. மிகவும் அழகான, திறமையான நடிகை அவர்.

இதைப் பற்றி பேச எனக்கு வார்த்தைகளே இல்லை. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீதேவியின் குழந்தை சிரிப்பை தவறவிட்டுவிட்டோம் என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.