Asianet News TamilAsianet News Tamil

திறக்கப்பட்ட கர்நாடக அணைகள்... மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

Water inflow increases in Mettur Dam as Karnataka Dams release water
Author
First Published Aug 6, 2023, 10:30 AM IST

கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதை அடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறப்புக்காகக் காத்திருந்த தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. 3 மாதங்களாக அணையில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் போதிய மழைப்பொழிவு இல்லாத நிலையில், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இதனால், மேட்டூர் அணையில் நீர்மட்டம் மளமளவென குறைந்து வந்தது. இதனால், அணையில் மூழ்கி இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை முழுவதும் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

எவ்ளோ தாகம் எடுத்தாலும் இதை மட்டும் செய்யாதீங்க... 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் சாவு!

Water inflow increases in Mettur Dam as Karnataka Dams release water

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் கே.ஆர்.எஸ் அணையில் 35 டிஎம்சி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. கபினி அணையிலும் நீர் நிரம்பியிருக்கிறது. இன்னும் அந்த அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து கூடிவருகிறது.

ஆனால், இதனால் உபரி நீர் தமிழ்நாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 124 அடி உயரம் கொண்டது. அணையில் அதிகபட்சமாக 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அதற்கு மேல் வரும் தண்ணீர் உபரி நீராக அணையில் இருந்து திறந்தவிடப்படும்.

ஜம்மு காஷ்மீரின் 72 ஆண்டு கால அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சிறப்பு அந்தஸ்து நீக்க நடவடிக்கை

Follow Us:
Download App:
  • android
  • ios