கோடை விடுமுறை என்பதால் திருமலை ஏழுமலையான் கோவிலில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் ஏழுமலையானை வழிபட பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலைக்கு செல்ல முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதி வருவதால், முன்பதிவு செய்யாதவர்களுக்கும் தற்போது தேவஸ்தானம் திருமலைக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. அதன்படி திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து, காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். திருமலைக்கு செல்லும் அவர்கள் தங்கள் ஆதார்அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.

பின்னர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருப்பு அறைகளில் குவிந்துள்ளனர். இதனால் ஏழுமலையான் தரிசனத்திற்கு சுமார் 30 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விஐபி தரிசனம் மற்றும் வாராந்திர சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
மேலும் படிக்க: புதுச்சேரிக்குள் சொகுசு கப்பல் வருவதற்கு அனுமதி மறுத்தது ஏன்? ஆளுநர் தமிழிசை கூறிய புதிய தகவல்
